கோயம்புத்தூர் பிப்ரவரி 14 -2022 | பத்திரிக்கை செய்தி உடனடி செய்தி வெளியீட்டிற்காக.
உள்ளாட்சித் தேர்தல் களம் 2022 களத்தில் ஆண்களுக்கு நிகராக பல்லாயிரக்கணக்கான பெண்களும் வரும் 19ஆம் தேதி மக்களின் வாக்குக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அது மக்களின் நலமாக இருக்கட்டும் அவர்கள் சுயநலமாக இருக்க நாம் அனுமதிக்க கூடாது….
இந்தியா வழிநடத்த தமிழ்நாடு வாசியின் பங்கு இனி முக்கியமா கட்டும் தமிழனின் வரலாற்று பின்னணியில் மனதில் கொள்வோம். எனது வாழ்நாள் குறிக்கோள் தமிழகத்தில் நல்லாட்சி. பிறகு இந்தியாவில் நல்லாட்சி. பிறகு உலக அமைதி. எனது இன்றைய குறிக்கோள் உள்ளாட்சியில் நல்லாட்சி. இதை கொடுக்கும் திறமை தமிழர்களுக்கு மட்டுமே உள்ளது.
ஏனென்றால், நாம் மனு நீதி சோழன் பரம்பரையில் வந்தவர்கள். யார் இந்த மனு நீதி சோழன்?
அகத்தியர் மாமுனி கண்ட மக்கள் ஆட்சி முறை:
- ஆய கலைகள் 64-ம் கற்ற அறிஞர்கள், வல்லுநர்கள், சித்த மருத்துவர்கள், குருக்கள், புலவர்கள், மாமுனிகள் நிரம்பி வழியும் அரசு அவை அமைத்து, அரசு அவையின் வழிகாட்டுதல் படி அரசன் ஆட்சி செய்யும் முறை
- மக்கள் தங்களின் குறைகளை தீர்க்க அவர்களின் மனுவை ஆராய்ச்சி மணி ஓசை எழுப்பி அதன் மூலம் தனக்கு குறை உள்ளதை அரசனுக்கும், அரசு அவைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒரே நேரத்தில் தெரிவிக்கும் முறையை அமல்படுத்தி, மனு கொடுத்தால் நீதியும் நிவாரணமும் கொடுத்து அரசன் ஆட்சி செய்யும் முறை
- இந்த ஆட்சி முறையை உலகிலேயே முதன் முறையாக அமல் படுத்தியவர் சோழ அரசன் எல்லாளன். இந்த மன்னனுக்கு அகத்தியர் மாமுனி கொடுத்த பட்டம் மனு நீதி. அதாவது மக்கள் மனு கொடுத்தால் நீதி வழங்கியவன். இதனால் எல்லாளன் மனு நீதி சோழன் ஆனார்.
நம் ரத்தம் இப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்களை சேர்ந்தது.
நாம் குலசேகர பாண்டியன் பரம்பரையில் வந்தவர்கள்: தனது அரசு அவை தீர்ப்பை ஏற்று கோவலனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய மாமன்னர் குலசேகர பாண்டியன், கண்ணகி தனது அரசவையில் வழக்காடி நீதி தவறி விட்டதை அறிந்த மள்ளன் தனது செங்கோலுடன் தானும் சாய்ந்து மாண்டான்.
நம் ரத்தம் இப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்களை சேர்ந்தது. நாம் மாமன்னன் ரவிவர்மன் பரம்பரையில் வந்தவர்கள்: கிழக்காசிய நாடுகளை ஆண்ட சரித்திரத்திற்கு உலகிலேயே இன்றும் இணையில்லாத மாபெரும் ஆங்கூர் கோவில் எடுத்துக்காட்டு. இதை கட்டிய ரவிவர்மன் ஒரு மாபெரும் மன்னன். ஆக, உலக சரித்திரத்தில் மக்கள் நன்மைக்காக மாபெரும் ஆட்சி முறையை கொடுத்தவர்கள் நாம். நமக்கு நிகர் நாம் மட்டுமே. இப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாம். இப்படி நம் பெருமையை எடுத்துக் காட்ட எத்தனையோ உதாரணம் அடுக்கலாம். முகலாய மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியால் அவர்கள் நன்மைக்காக நம் நல்லாட்சி முறை கடத்தப்பட்டு நிரந்தர சிறையில் அடைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். தமிழன் தனது கலாச்சாரத்தால் பண்பாட்டால் இன்று உலகெங்கும் உயர்ந்து நிற்கிறான்.
========
மனுநீதி அறக்கட்டளை தேர்தல் விழிப்புணர்வு உள்ளாட்சியில் நல்லாட்சி காண்பது.
மனுநீதி மாணிக்கம்
உள்ளாட்சித் தேர்தல் 2022 வாக்களிக்க தகுதியானவர் யார் மனுநீதி அறக்கட்டளை அடையாளப்படுத்துகிறது.
தமிழன் தனது கலாச்சாரத்தால் பண்பாட்டால் இன்று உலகெங்கும் உயர்ந்து நிற்கிறான். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஆட்சி முறையால் தலை குனிந்து நிற்கிறான். இப்படியே விட்டு விட்டால் உலகத்திலேயே சிறந்த நமது பரம்பரைக்கே சொந்தமான தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கல்வி முறை முற்றிலும் அழிந்து விடும். இன்று உலக மக்களுக்கு தேவை அமைதி. அமைதிக்கு தேவை நம் கலாச்சாரம், அதற்கு தேவை தமிழகத்தில் நல்லாட்சி. ஆகவே தமிழக மக்களே, நாம் தனித்து நிற்க வேண்டும். நல்லாட்சி நமக்கு மிக மிக அவசியம். நல்லாட்சி என்றால் என்ன? அரசு சேவை அனைத்தும் மக்கள் மடியில். இதுவே நல்லாட்சி.
வரும் உள்ளாட்சி தேர்தலில் பல நல்லவர்கள் மற்றும் வல்லவர்கள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு எனது வேண்டுகோள்: வேட்பாளர்கள் கீழ்கண்ட உறுதிமொழியை ஏற்று கொள்ளுங்கள்: இதன் அடையாளமாக கீழ் கண்ட படிவத்தில் கையொப்பம் இட்டு தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் படி மனு நீதி சோழன் சார்பாக மனு நீதி மாணிக்கம் ஆகிய நான் கேட்டுக்கொள்கிறேள்.
எனது உறுதிமொழி: நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் என் தொகுதிக்கு அரசன் என்பதை அறிவேன். அரசன் என்பவர் ஒரு பொது ஊழியர் ஆவார் என்பது எனக்கு தெரியும். எனது தொகுதி மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வந்து அரசு சேவைகளை பெற காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவிக்கிறேன் அரசு சேவை அனைத்தும் மக்கள் இருக்கும் இடத்திற்கு எடுத்து செல்வேன் என்பதை என் தொகுதி மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
ஆகவே நான் உங்களுக்கு தொண்டு செய்து எனது பிறவி கடனை அடைக்க வழி வகை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த உறுதிமொழி பத்திரத்தை சூரியன் சந்திரன் சாட்சியாக நான் கையொப்பம் இட்டுள்ளேன். வாக்காளர்கள் இப்படிப்பட்ட வேட்பாளர்களை மட்டும் அடையாளம் கண்டு அதில் நல்லவர்கள் மற்றும் வல்லவர்கள் யார் என்று அடையாளம் கண்டு வாக்களிக்குமாறு மனு நீதி அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இப்படிப்பட்ட வேட்பாளர்கள் ஒருவர் கூட இல்லை என்றால் மீண்டும் தேர்தல் வரும்படி உங்கள் வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் வழிவகுத்துள்ளது என்பதை மனு நீதி இயக்கம் உங்களுக்கு நினைவூட்டுகிறது.
வேட்பாளர் வாக்காளர்களுக்கு கொடுக்கும் உறுதிமொழி பாத்திரம்;
தேதி:
எனது தொகுதி பெயர்:
எனது பெயர்:
இப்படிக்கு
மனு நீதி மாணிக்கம்
www.manuneethi.tv
வாழ்க தமிழ் | வாழ்க தமிழ் மக்கள் | வாழ்க தமிழ் கலாச்சாரம் | வாழ்க தமிழ் பண்பாடு
Download Link (PDF): https://bit.ly/34WUU2Q