☘️ எந்த ஒரு அரசியல் தலையீடும் இன்றி இந்திய அளவில் ஒரு ” விவசாய மேம்பாட்டு ஆணையம்” IARA அமைத்தாலே விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

IARAIndian Agricultural Reforms Authority
இந்திய விவசாய மேம்பாட்டு ஆணையம்

இதை பற்றி மேலும் விளக்குகிறார் கோவையில் விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் அய்யா மனுநீதி மாணிக்கம்.

Indian Agricultural Reforms Authority IARA
IARA -Manu Neethi Manickam

இந்தியாவில் ஒரு விவசாயி கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. பொதுவாகவே விவசாயிகளுக்கு மற்ற அனைவரையும் காட்டிலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. ஏனென்றால் அவர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள் . ஆனால் நமது இந்திய விவசாயிகள் மிகவும் ஏழைகள், தொடர்ந்து ஏழைகள் ஆகவே இருக்கின்றனர். இருக்க வைக்க படுகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். அரசாங்கத்திடம் என்ன கேட்க வேண்டும், அரசாங்கத்தால் என்ன கொடுக்க முடியும் என்பது கூட விவசாயிகளுக்கு தெரியாது.

👩🏻‍🌾👨🏻‍🌾 🌱🎋🌾 திருவள்ளுவர் சொன்னதை உண்மையாக்க வேண்டும் . அதாவது அரசனுக்கே உணவளிப்பவன் என்ற பெருமிதத்தோடு விவசாயிகளை வாழ வைக்க வேண்டும். விவசாயிகள் , குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் நிகர லாபம் ஈட்ட வேண்டும். இதற்காக எனது ஆராய்ச்சியில் சரியான தீர்வையும் கண்டுபுடித்துளேன் , அது தான் IARA எனப்படும் இந்திய விவசாய மேம்பாட்டு ஆணையம் Indian Agriculture Reforms Authority (IARA)

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போலவே முழு அதிகாரம் கொண்ட இந்திய விவசாய மேம்பாட்டு ஆணையம் நமக்கு தேவை .
இதை செயல்படுத்த பின்வரும் இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்

  1. உற்பத்தி திறனை அதிகப்படுத்துதல்
  2. விவசாய பொருட்களுக்கான அடிப்படை விலையை எந்த ஒரு அரசியல் குறுக்கீடும் இன்றி நிர்ணயித்தல்

கடந்த காலங்களில் பல லட்சம் கோடி ரூபாயை செலவிட்டோம், ஆயிரக்கணக்கான முனைவர்களையும், அறிஞர்களையும் விவசாய துறைக்கு ஏற்படுத்தியுள்ளோம். அதோடு இந்தியாவில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் நிறுவியும் உள்ளோம். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கள பொறியாளர்கள் மற்றும் இதர பட்டதாரிகளும் விவசாயிகளுக்கு உதவ நிர்ணயிக்கப் பட்டுள்ளார்கள், இவர்களுக்கு வருமானம் நமது அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது.

விவசாய பொருட்களுக்கு உற்பத்தி காலங்களிலும், உற்பத்தி இல்லாத காலங்களிலும் ஒரே விலையை நாம் கொடுக்க வேண்டும். விவசாயிக்கு அதிக பணம் கிடைக்கும், விவசாய விளைபொருட்களுக்கு பொதுமக்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியதில்லை.

🍀 நம் இந்திய பொருளாதாரம் GDP குறியீட்டில் இரட்டை இலக்கமாக உயரும்.
🍀 வறுமையின் விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகும்.
🍀 இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய் விதைகள் தற்போது 75 சதவிகிதம் ஆகும், முதலில் இதை நிறுத்துவோம். அதேசமயம் அவை அனைத்தையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும், மேலும்

🍀 நமது ஏற்றுமதி 1.00 டிரில்லியன் அமெரிக்க #டாலரை இன்னும் 7 ஆண்டுகளில் தொட்டு விடும்.

IARA – இந்திய விவசாய மேம்பாட்டு ஆணையம்: IARA Presentation (Click and download)

இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் நுகர்வோர்களும் பயனடைவார்கள். விவசாய பொருட்களினால் ஏற்படும் பண வீக்கம் கட்டுக்குள் வந்து விடும் என்பது இந்த IARA வின் ஒரு மிக சிறப்பம்சமாகும்.

இது நாம் பெறக்கூடிய சிறந்த நன்மைகளில் ஒன்றாகும். இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த IARA விவசாய மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் நாம் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – ஐ.சி.ஏ.ஆர் போன்ற முதன்மையான அமைப்பு நம்மிடம் ஏற்கனவே உள்ளது, அங்கு நிறைய ஊழியர்கள் உள்ளனர், நாம் அவர்களின் பொறுப்பாக இத்திட்டத்தை ஒப்படைக்க வேண்டும். எல்லா திறமையான மக்களும் நம்மிடமே இருக்கிறார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், அவர்கள் அதைச் செய்வார்கள். இது மிகவும் சாத்தியம்.

👉🏻 இதை யார் செய்ய முடியும்?
ஆம் இதனை நமது பாரத பிரதமரால் மட்டுமே சாத்தியமாக்க முடியும்.

விவசாயம் செழிக்க விவசாயி வாழ்வு மேம்பட அதிகம் பகிரவும்
நன்றி!

மேலும் விவரங்களுக்கு:
https://manuneethi.tv/IARA-V3.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *