நமது இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து நகர வாசிகள் பெருகிகொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக திடக்கழிவு மேலாண்மை கட்டுக்கடங்காமல் சுகாதாரக்கேடுகள் பெருகி வருகின்றன
சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த வொரு மாசுபாட்டிற்கும் எளிமையான ஒரு தீர்வு அவசியம் என்பதை உணர்ந்து, அய்யா அப்துல்கலாம் அவர்களும் மனுநீதி மாணிக்கம் அய்யா அவர்களும் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது எல்லா வித மாசுபாடு களுக்கும் தீர்வு உண்டு என்பதை நிரூபித்து உள்ளார்கள்.
இதில் திடக்கழிவு மேலாண்மைக்கான தீர்வை வெற்றிகரமாக உருவாக்கி சர்வதேச காப்புரிமை பெறப்பட்டு கடந்த 5 வருடங்களாக நமது தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
பூமாதேவியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக புதிய மேக் கிரீன் இன்சினரேட்டர் எனும் பசுமை எரியூட்டி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புக்கு தலைமை வகித்தவர் விஞ்ஞானி டாக்டர் ராமன் சிவக்குமார் அவர்கள் .
திடக்கழிவு மேலாண்மையில் பல சிக்கல்கள் இருக்கிறது. முதலில் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அதனை பிரித்து வகை படுத்துவது என்ற முறை உலகெங்கிலும் நடந்து வருகிறது . ஆனால் நடைமுறை சிக்கல் காரணமாக நமது அரசு குப்பைகளை பிரிக்கும் மையம் , நுண் உரம் தயாரிக்கும் மையம் , போன்றவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என அனைத்து குப்பைகளையும் பிரித்து வகை படுத்துவது என்ற முறையையும் முயற்சி செய்தது. ஆனால் இந்த முறையிலும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக திடக்கழிவு மேலாண்மையை துல்லியமாக செயல்படுத்த முடியவில்லை .
ஆகவே நடை முறை சிக்கல்களை ஆராய்ந்த பின் இதற்கு சரியான தீர்வினை அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்கள் கொண்டு வந்துள்ளார்
அதாவது பிரிக்காத குப்பைகளை புதிதாக அமைக்கப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மக்கும் குப்பைகளை விவசாயத்திற்கு உதவும் இயற்கை உரமாகவும், மக்காத குப்பைகளை விஞ்ஞான முறையில் எந்த வித மாசுவும் இல்லாமல் எரித்து அதில் வரும் சாம்பலை கட்டுமான பணிகளுக்கு உபயோக படுத்தும் பேவர் பிளாக் கற்களாகவும் மாற்றி விடுகிறோம்.
இந்த கண்டுபிடிப்பு முதன் முதலாக ஈரோடு மாநகராட்சியில் உள்ள வைரம் பாளையம் குப்பை கிடங்கில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல் படுத்தபட்டது.
தற்போது தமிழகத்தில் சென்னையில் உள்ள மணலி மற்றும் கொடுங்கையூர் மாநகராட்சி திடக்கழிவுகளை மாசு இல்லாமல் திறம்பட மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது
அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் முயற்சியினால் இந்த தொழிநுட்பம் உலகெங்கும் எடுத்து சென்று திடக்கழிவு மாசு இல்லாத பூமியை உருவாக்க எல்லா முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலும் இயற்கையும் இனி என்றும் பாதுகாக்கப்படும்.
www.makincinerator.com
MAK Green Incinerator