
Permanent solution to Water shortage and Sewage problem
இந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க!
உலகெங்கிலும் அதிகரித்துக் கொண்டே வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் போன்றவை உதவும் என்றாலும், பயன்படுத்திய கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
அந்த வகையில், கோவையை சேர்ந்த MAK India Limited நிறுவனமும், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வும் இணைந்து கழிவுநீரை நன்னீராக மாற்றும் பாக்டீரியாவை மாட்டு சாணத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
சாணத்தில் இருக்கும் பாக்டீரியாவை கழிவுநீரில் விடும் போது, பாக்டீரியாக்கள் அதை நன்னீராக மாற்றுகின்றன. அந்த நீரை குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உயிரியல் முறைப்படி நடக்கும் இந்த மாற்றம் கையாள மிகவும் எளிமையானது. இதற்கு மிகக்குறைந்த செலவே பிடிக்கும் என்பதால், இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.
- (Bengaluru -Lalbagh) பெங்களூரு லால் பாக் கழிவுநீர் ஏரியில் இந்த பாக்டீரியாவை சோதனை செய்தபோது நல்ல பலன் தந்துள்ளது.
- ( Chennai )சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் இந்த பாக்டீரியாவின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கழிவுநீர் பிரச்னைக்கும் இந்த பாக்டீரியா நிரந்தர தீர்வளிக்கும் என்பதால், இதை அரசு முறையாக திட்டமிட்டு செயல்படுத்த முன்வரவேண்டும்.
Video Source : Dinamalar
Hello to every one, since I am actually keen of reading this
web site’s post to be updated regularly. It carries
nice stuff.