
நல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை:
நமது இந்திய கலாச்சாரம் சார்ந்த சிறந்த கல்வி கொடுப்போம் இதில் யோகாசனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய அடிப்படை விஞ்ஞானம்.
* விவசாயம் மற்றும் உணவு பற்றிய அடிப்படை விஞ்ஞானம் ஆகியவற்றை கட்டாயமாக்குவோம்.
தமிழ்நாட்டை உலகிலேயே ஒரு தலை சிறந்த கல்வி மையமாக்குவோம். இது சாத்தியம், ஏனெனில் உலகில் தலைசிறந்த கல்விமையங்கள் அனைத்திலும் நமது தமிழர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இவர்களை தமிழகத்திற்கு வரவழைத்து நமது #கல்வி முறையை மாற்றியமைப்பதில் எந்த சிரமமும் இல்லை. இவர்களுக்கு தேவை அங்கீகாரம் மற்றும் அரசியல் தலையீடு அற்ற செயல்பாடு. இதற்கு தேவை நல்லாட்சி மட்டுமே.
நமது நல்லாட்சியில்
1. படிப்பு என்பது எல்லோருக்கும் எல்லா வகுப்புகளிலும் இலவசம். தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைவருக்கும் இலவச கல்விதான் கொடுக்க வேண்டும். முடியாதவர்கள் கல்வி துறையிலிருந்தே விலகிக்கொள்ளலாம். கல்வி கொடுப்பது என்பது ஒரு தர்ம காரியம். வியாபார ஸ்தலம் அல்ல. ஆகவே தர்மம் கொடுக்க இயலும் நபர்கள் அல்லது இயக்கங்கள் மட்டுமே கல்வித்துறையில் இருக்கட்டும்.
2. அரசாங்க கல்வி நிறுவனங்களின் தரம் உயர ஒரே வழி அரசாங்க அதிகாரிகளின் குழந்தைகள் அனைவரும் அரசாங்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க வைப்பது தான்.
தமிழகத்தில் பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருந்தும் வேலையில்லா பட்டதாரிகள் சுமார் 40 லட்சம் பேர் உள்ளனர். இதற்க்கு ஒரே காரணம் படித்திருந்தும் திறமை இல்லாததால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை . ஆகவே படிக்கும் பொழுதே அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த துறையினை தேர்ந்தெடுத்து அந்த துறையில் திறனை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் படிக்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் படித்து முடிக்கும் முன்பே நிச்சய வேலை வாய்ப்பு கிடைக்கும்படி செய்வோம்.
நமது நல்லாட்சியில் கல்விக்கான கொள்கைகள் பின்வருமாறு,
a) பன்னிரண்டாம் வகுப்பு (+2) வரை கல்வி கட்டாயமாக்கப்படும்.
b) பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் அனைவருக்கும் இலவச சீருடை, புத்தகங்கள் மற்றும் பள்ளி போக்குவரத்து கட்டணம் மற்றும் அனைத்து பள்ளி கட்டணங்களுக்கு விலக்கு வழங்கப்படும்.
c) அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் நிறுவனத்தினரின் CSR செயல்பாட்டின் கீழ் கொண்டு வருவோம்.
d) தேவைக்கேற்ப மேலும் அரசாங்க பள்ளிகள் திறக்கப்படும்.
e) தற்போது இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி கொடுத்து கல்வியின் தரம் உயர்த்தப்படும்.
f) யோகா மற்றும் கலாச்சாரம் கற்பித்தல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படும்.
g) பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்திற்கு சிறப்பு பயிற்சி மையங்கள் ஏற்படுத்துவோம். இதன் மூலம் பின்தங்கிய மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டியிட முடியும்..
h) 40 வயதிற்கும் குறைவானவர்களுக்கு முதியோர் கல்வித்திட்டம் கட்டாயமாக்கப்படும்.
i) தமிழகத்தை நமது நாட்டின் தலைசிறந்த கல்விமையமாக்குவோம்.
j) நமது கல்வித் திட்டங்களை சீர்படுத்தி பொறியாளர்கள் மற்றும் பட்டதாரிகள் உடனடி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்வோம்.
k) எல்லா கல்லூரிகளும் IIT மற்றும் Harvard போன்ற கல்வி மையங்களின் தரத்தை காட்டிலும் உயர செய்வோம் .
l) வேலை வாய்ப்பு மையம் ஏற்படுத்துவோம். மாணவ மாணவிகள் கல்லூரியில் நுழையும் பொழுதே அவர்களின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் அவர்களுக்குரிய படிப்பு மற்றும் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை இந்த மையம் ஏற்றுக்கொள்ளும். இத்துடன் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
m) ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.ஆர்.எஸ் படிக்கும் மாணவர்களை தயார் செய்ய சிறப்பு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
முடிவில் பிறநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டில் படிக்கும் நிலையை உருவாக்குவோம்.
இதற்கு நமக்கு நல்லாட்சி மிக மிக அவசியம்.
உங்கள் நல்லாட்சி நண்பன்
மனுநீதி மாணிக்கம்
https://manuneethi.tv/mak/